Janhvi Kapoor: நட்புடா... ஜான்வி கபூருக்கு 5 கோடி லம்போர்கினி காரை பரிசாக அனுப்பிய தோழி! யார் தெரியுமா?
பாலிவுட்டில் வெளியான 'தடக்' என்ற படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார் பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர். சினிமா பின்னணியை கொண்ட நடிகை என்பதால் சினிமாவில் எண்ட்ரி இவருக்கு எளிதாகவே கிடைத்தது. தடக் படத்தைத் தொடர்ந்து கோஸ்ட் ஸ்டோரிஸ், ரோகி, குட் லக் ஜெர்ரி, மிலி, பவால், மிஸ்டர் அண்ட் மிசஸ் மஹி, என்று பல படங்களில் நடித்தார்.
இவர் நடிப்பில் வெளியான 80 சதவீத படங்கள் தோல்வியை தழுவினாலும்... இவர் மீதான கிரேஸ் கொஞ்சம் கூட குறையவில்லை. எனவே தற்போது பாலிவுட் திரையுலகை தாண்டி, தெலுங்கு திரைப்படங்களிலும் நடிக்க துவங்கி விட்டார் ஜான்வி கபூர்.
அந்த வகையில், தெலுங்கு கடந்த ஆண்டு வெளியான... தேவாரா படத்தில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது Sunny Sanskari Ki Tulsi Kumari, Param Sundari ஆகிய பாலிவுட் படங்களிலும், Peddi என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தான் லம்போர்கினி கார் சர்பிரைஸாக ஜான்வி கபூர் வீடு தேடி வந்துள்ளது. ஜான்வி கபூரின் பணக்கார தோழியான, அனன்யா பிர்லா தான் இவருக்கு ரூ.5 கோடி என்று கூறப்படுகிறது. ஜான்வி கபூருக்கு அவரது தோளியான அனன்யா பிர்லா தான் அவருக்கு இந்த காரை பரிசாக கொடுத்துள்ளார்.