வெறித்தனம்... 'ரெட்ரோ' படத்தில் மாஸ் காட்டும் நடிகர் சூர்யாவின் ஸ்டில்ஸ்!
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ரெட்ரோ திரைப்படத்தில் இருந்து, சூர்யாவின் மாஸ் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன.
Continues below advertisement

ரெட்ரோ படத்தில் இருந்து புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது
Continues below advertisement
1/7

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முதல் முறையாக நடித்துள்ள திரைப்படம் 'ரெட்ரோ'.
2/7
'கங்குவா' படத்தின் தோல்விக்கு பின்னர் வெளியாக உள்ள இந்த படத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.
3/7
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்ட நிலையில்... அடுத்த மாதம் மே 1-ஆம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது.
4/7
மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, வரும் 18-ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும்... கூடிய விரைவில் இதுகுறித்த தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது.
5/7
படத்தின் ரிலீசுக்கு இன்னும் 3வாரங்களே உள்ள நிலையில்... படத்தின் புரமோஷன் பணிகள் மற்றும் வியாபாரம் படு தூளாக நடந்து வருகிறது.
Continues below advertisement
6/7
65 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம், 200 கோடி வசூலை எட்டி சாதனை படைக்குமா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
7/7
மேலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாகவே இந்த படத்தின் பாடல்கள் அமைந்தது. சூர்யா கேங்ஸ்டார் மற்றும் ரொமான்டிக் ஹீரோ என ஒரே படத்தில் தன்னுடைய இரண்டு வேரியேஷனோடு நடித்துளளார். இந்நிலையில், இந்த படத்தில் இருந்து நடிகர் சூர்யா மற்றும் பூஜா ஹெக்டேவின் சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
Published at : 09 Apr 2025 11:22 PM (IST)