April fools day : ‘சும்மா ப்ராங் பண்ணோம்..’ ஏப்ரல் ஃபூல்ஸ் டே பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!
ஏப்ரல் ஃபூல்ஸ் டே பிரான்ஸ் நாட்டில் இருந்து தோன்றியிருக்கலாம் என்று வரலாற்று அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். ஏப்ரல் 1 ஆம் தேதி ஒருவரின் முதுகில் காகித மீனை திருட்டுத்தனமாக இணைக்க முயற்சிக்கும் ஒரு பொதுவான வழக்கம் பிரான்சில் இன்றளவிலும் காணப்படுகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஏப்ரல் 1 1698 இல் லண்டன் பிரிட்ஜில் சிங்கங்களைக் குளிப்பாட்டுவதை பார்க்க மக்கள் அழைக்கப்பட்டனர். ஏப்ரல் ஃபூல்ஸ் தினத்தையொட்டி கேலி செய்தோம், என அடுத்த நாள் செய்தி தாள் ஒன்றில் தெரிவித்தனர்.
பண்டைய ரோமில், ஏப்ரல் ஃபூல்ஸ் டேவில் மக்கள் ஒருவருக்கொருவர் நகைச்சுவையாக கிண்டல் செய்து கொண்டு ஒருவருக்கொருவர் அன்பைப் பரிமாறிக் கொள்வர்
பிரிட்டிஷ் நாட்டுப்புறக் கதைகளிள் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோதம் நிகழ்வுடன் ஏப்ரல் ஃபூல்ஸ் டே தொடர்புடையது. கோதம் நிகழ்வில் அரசன் எந்தப் பகுதியைக் கால் வைத்தாலும் அது பொதுச் சொத்தாகிவிடும் என்பது அப்போது ஒரு மரபாக இருந்தது
ஸ்காட்லாந்தில் ஏப்ரல் முட்டாள்கள் தினம் இரண்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது. அந்நாட்டு மக்கள் இதை கோலாகலமக கொண்டாடுகின்றனர்.
ஏப்ரல் 1 2002 ல் நாசா சந்திரன் புகைப்படத்தை வெளியிட்டது. போட்டோ ட்ரெண்ட் ஆனவுடன் நாசா இது சந்திரன் இல்லை காலாவதியான பாலாடை கட்டி என்று ப்ரராங் செய்து ஏப்ரல் ஃபூல்ஸ் டே வாழ்த்தையும் தெரிவித்தது. (Photo Credits: Ranger 9 Spacecraft, NASA)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -