International Biscuit Day : அனைத்து வயதினருக்கும் பிடித்த பிஸ்கெட்டுகளை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!
பண்டைய சுமேரியர்கள், பிஸ்கெட்டுகளை பியர் செய்வதற்காகவே பயன்படுத்தினார்கள். ரஸ்க் போன்று இருக்கும் அந்த பிஸ்கெட்டுகளை சூடான நீரில் ஊற வைத்து, மசித்து அத்துடன் தேன் அல்லது பேரிச்சையின் சாற்றை சேர்த்து அதை நொதிக்க வைத்து பியரை செய்தனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபிஸ்கெட்டுகளில் முதன்முறையாக சர்க்கரை சேர்த்தவர்கள் இஸ்லாமியர்கள்தான். சர்க்கரை, உடலின் ஆரோக்கியத்தை சீராக வைக்க உதவுவதாக கருதப்பட்டது. இந்த பிஸ்கெட்டுகளின் இடையில், அத்தி பழமும் நட்ஸ் வகைகளும் சேர்க்கப்பட்டது. ஆரோக்கியத்தை காக்கும் உயர்தர உணவாக பிஸ்கெட்டுகள் இருந்தன.
ஆங்கிலேயர்கள் செய்த பிஸ்கெட்டுகளில் மஸ்க் அல்லது சோம்பு சேர்க்கப்பட்டது. உணவு சாப்பிட்டு முடித்த பின் நறுமணம் நிறைந்த பிஸ்கெட்டுகளை சாப்பிட்டு வந்தனர். இது சுவாச துர்நாற்றத்தை போக்குவதற்காக பயன்படுத்தப்பட்டது.
17 ஆம் நூற்றாண்டில், திராட்சை சாறில் இருந்து செய்யப்படும் வைனுடன் பிஸ்கெட்டுகளை சேர்த்து சாப்பிட்டு வந்தனர். ஸ்பெஷல் பிஸ்கெட்டுகளில் தேசபக்தியை தூண்டும் சின்னங்கள் பொறிக்கப்பட்டது.
ஒரு சில இடங்களில் நடக்கும் இறுதிச் சடங்குகளில், இறந்தவர்களின் பக்கத்தில் பிஸ்கெட்டுகள் வைக்கப்பட்டன. துக்கம் அனுசரிக்க வரும் மக்கள், அந்த பிஸ்கெட்டுகளை சாப்பிட்டால், இறந்தவரின் பாவம் நீங்குவதாக கருதப்பட்டது.
ராணி விக்டோரியாவின் பெயரை பிஸ்கெட்டிற்கு வைக்க ஹண்ட்லி & பாமர்ஸ் நிறுவனம் ஆங்கிலேய பேரரசியிடம் அனுமதி கேட்டது. தன்னுடைய பெயரை பிஸ்கெட்டிற்கு வைப்பதை அவமரியாதையாக கருதிய ராணி அதை மறுத்துவிட்டார். பின் அவர் வாழ்ந்த அரண்மனையின் பெயரை கொண்ட‘ஆஸ்போர்ன்’என்கிற பிஸ்கெட்டுகள் 19 நூற்றாண்டில் பிரபலமாக இருந்தது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -