Actress Anjali : 50வது படத்தில் நடிக்கும் அங்காடி தெரு புகழ் அஞ்சலி!
ஓரிரு தெலுங்கு படங்களில் நடித்த பின்னர், இயக்குநர் ராமின் ‘கற்றது தமிழ்’படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான அஞ்சலிக்கு அடையாளம் கொடுத்தது அங்காடி தெரு படம்தான்.
அந்தப் படத்திற்கு பின்னர் வெங்கட் பிரபு இயக்கிய மங்காத்தா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
எங்கயும் எப்போதும், கலகலப்ப , வத்திக்குச்சி, சேட்டை , சகலகலா வல்லவன், இறைவி, தரமணி, மாப்ள சிங்கம், பலூன் போன்ற படங்களில் நடித்தார்அஞ்சலி.
அதன் பின் தமிழில் அஞ்சலி நடித்த படங்கள் கவனத்தை ஈர்க்க தவறியது.
சிங்கம் 2 வில் ‘வாலே வாலே’பாடலுக்கு நடனம் ஆடிய இவர், தெலுங்கு படமான மச்செர்லா நியோஜகவர்கம் படத்தில் ரா ரா ரெட்டி பாடலில் சூப்பராக டான்ஸ் ஆடியிருந்தார். இது, இன்ஸ்டா ரீல்ஸில் செம வைரலானது.
கேம் சேஞ்சர் என்ற தெலுங்கு படத்தில் பிசியாக உள்ளார். தற்போது அஞ்சலியின் 50வது படத்திற்கு ஈகை என்று பெயரிடப்பட்டுள்ளது.