Jawan Trailer : ‘இந்த நூற்றாண்டுக்கான ட்ரெய்லரை பார்த்துவிட்டேன்..’ ஜவான் குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்ட கரண் ஜோஹர்!
தமிழில் விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கி இருந்த அட்லீ முதன் முதலாக இந்தி திரையுலகில் தடம் பதித்துள்ளார்.
ஷாருக்கான் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளதால், ஜவான் படத்திற்கான எதிர்ப்பார்ப்பு இந்திய அளவில் எகிறியுள்ளது.
ஜவானில் ஷாருக்கானிற்கு ஜோடியாக நயன்தாராவும், வில்லனாக விஜய் சேதிபதியும் நடித்துள்ளனர்.
இப்படத்தின் ப்ரீவுயூ கடந்த மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வருகின்ற செப்டம்பர் 7ம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் வெளிவந்த வண்ணம் உள்ளது.
இதனையடுத்து இப்படத்தின் ட்ரெயிலரை தயாரிப்பாளரும் இயக்குநருமான கரண் ஜோஹர் பார்த்துவிட்டதாக இன்ஸ்டாவில் ஸ்டோரி பதிவிட்டுள்ளார்.
இந்த ஸ்டோரியை ரசிகர்கள் எக்ஸ் பக்கத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர். அத்துடன் ஜவான் ட்ரெய்லரின் ரிலீஸிற்காக எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.