Actor Sasikumar:இதுவரை யாரும் பார்த்திடாத ஸ்டைலிஷ் லுக்கில் சசிகுமார் - மாஸ் க்ளிக்ஸ்!
மதுரையை சேர்ந்தவர் சசிகுமார். இவர் பாலா மற்றும் அமீர் ஆகிய இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அவர் இயக்கிய உருவான சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார்.
சசிகுமாரின் இயக்கம் மட்டுமின்றி, அவர் ஏற்று நடித்த பரமன் எனும் கதாபாத்திரமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதைதொடர்ந்து ஈசன் எனும் திரைப்படத்தை இயக்கினார்.
சமுத்திரகனி இயக்கத்தில் உருவான நாடோடிகள் படத்தில் கருணாகரன் எனும் நாயகன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படம் கொடுத்த வெற்றியால் சசிகுமார் கிராமத்து கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நபர் ரசிகர்களிடம் பெயர் வாங்கினார்.
போராளி, சுந்தர பாண்டியன் என அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்து, முழு நேர நடிகரானார். இப்போது கூலர்ஸ் உடன் அதிரசியான மாஸ் காட்டும் ஃபோட்டோக்களை வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளத்தில் வரைல் ஆகி வருகிறது. கருடன் என்ற படம் இவர் இயக்கத்தில் வெளியாகியிருந்தது.
புதிய லுக்கில் சசிகுமாரின் புகைப்படங்களை ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.