True Story Movies : உண்மை சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்கள்!
2012 ஆம் ஆண்டு வெளிவந்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற படத்தை பாலாஜி தரணிதரன் இயக்கியிருந்தார். இதில் விஜய் சேதுபதி தத்ரூபமாக நடித்திருப்பார். இது நிஜத்தில் நடந்த சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2015 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விசாரணை. இதில் அட்டகத்தி தினேஷ், சமுத்திரக்கனி ,கயல் ஆனந்தி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தனர். இந்த படம் 3 தேசிய விருதுகளை பெற்றது
கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், போஸ் வெங்கட் ஆகியோர் நடித்த படம் தீரன் அதிகாரம் ஒன்று. இந்த படத்தை வினோத் இயக்கியிருப்பார். இது உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட க்ரைம் த்ரில்லர் படம்.
சுதா கங்கோரா இயக்கத்தில் வெளிவந்த சூரரை போற்று படம் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது. இந்த பயோபிக் படத்தில் சூர்யா ஹீரோவாக கச்சிதமாக நடித்திருப்பார்.
1993 ஆம் ஆண்டு கடலூரில் நடந்த உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் ஜெய் பீம். இந்த படத்தில் சூர்யா வழக்கறிஞர் சந்துருவாக நடித்திருப்பார்.
2024 ஆம் ஆண்டு வெளிவந்த ஜே பேபி படம். அட்டகத்தி தினேஷ், மாறன், ஊர்வசி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தனர். இதுவும் உண்மையில் நடந்த சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட படம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -