Miss world 2023 : 27 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் நடக்கவிருக்கும் உலக அழகிப் போட்டி!
உலகின் மிக பிரபலமான மற்றும் புகழ் பெற்ற அழகிப் போட்டிகளுள் ஒன்று மிஸ் வேர்ல்ட் அழகிப் போட்டி.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇதற்கு முன்னதாக இப்போட்டி 1996 ஆம் ஆண்டு பெங்களூரில் நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் நடைப்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய கடந்த ஆண்டின் (2022) மிஸ் வேர்ல்டு உலக அழகி கரோலினா பைலாவ்ஸ்கா, “ இந்த 71 ஆவது உலக அழகிப் போட்டியை நடத்த இந்திய அரசு ஒப்புக் கொண்டது. இந்த நாட்டின் கருணை, அழகு மற்றும் முற்போக்கான சிந்தனையை பிரதிப்பலிக்கிறது” என பேசினார்.
இந்த 71வது உலக அழகிப் போட்டியை மிஸ் வேர்ல்ட் லிமிடெட் மற்றும் பிஎம்இ என்டர்டெயின்மென்ட் இணைந்து நடத்துகிறது.
இதுவரை மிஸ் வேர்ல்டு பட்டத்தை இந்தியாவிலிருந்து ரீட்டா ஃபாரியா (1996), ஐஸ்வர்யா ராய் (1994), டயானா ஹேடன் (1997), யுக்தா முகி (1999), பிரியங்கா சோப்ரா (2000) மற்றும் மனுஷ் சில்லார் (2017) என 6 பேர் பெற்றுள்ளனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -