3 Years of 96: “காதலே காதலே தனிப்பெருந் துணையே’ - 96 ப்ளாஷ்பேக் க்ளிக்ஸ்
கடந்த 2018-ம் ஆண்டு வெளியான 96 திரைப்படம், இன்றுடன் மூன்றாண்டுகளை நிறைவு செய்கிறது. விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான 96 திரைப்படம் செம ஹிட்டானது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App96 திரைப்படத்தின் திரைக்கதை, 2015-ம் ஆண்டு எழுதியது என அப்படத்தின் இயக்குனர் பிரேம் தெரிவித்திருக்கிறார்.
இயக்குனர் பிரேம் அவர்களின் ‘பள்ளி ரீயுனியன்’ நிகழ்ச்சியை மையப்படுத்தியே 96 திரைப்படம் எடுக்கப்பட்டதாம்
ராம் மற்றும் ஜானு கதாப்பாத்திரத்தில் நடிக்க, முதல் தேர்வாகவே விஜய் சேதுபதி, த்ரிஷாவைதான் தேர்வு செய்திருக்கிறார் இயக்குனர் ராம்
இந்த படத்தில் கவனிக்க வைத்த இன்னொரு விஷயம், த்ரிஷாவின் ஆடை வடிவமைப்பு. 96 திரைப்படத்தின் ஆடை வடிமைப்பாளரான சுபஸ்ரீ கார்த்திக்கிற்கு அதிக பாராட்டுக்கள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
படம் வெளியான பிறகு, த்ரிஷாவின் ஆடை டிசைன் செம வைரலானது. அந்த ஆண்டின் ஃபேஷன் அப்டேட்டானது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -