Vijay Rambha Photos : ரம்பாவை குடும்பத்துடன் சந்தித்த தவெக தலைவர் விஜய்!
கோலிவுட்டின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய், அரசியலிலும் கால் பதித்துவிட்டார். தமிழக வெற்றி கழகத்தின் தலைரான இவர் சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகளுக்கு எதிராக அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வருகிறார்.
முழுநேர அரசியலில் ஈடுபடவுள்ளதாகவும் கைவசம் உள்ள படங்களில் மட்டும் நடித்துவிட்டு, இனி படங்களில் நடிக்க போவதில்லை என்றும் அவர் முன்னதாக கூறி இருந்தார். இதனால் ரசிகர்கள் பலர் வருத்தம் அடைந்தனர்.
தற்போது கோட் படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ரம்பாவையும் அவர் குடும்பத்தினரையும் சந்தித்துள்ளார் விஜய்.
இவர்கள் இருவரும் நினைத்தேன் வந்தாய், என்றென்றும் காதல், மின்சார கனவு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளனர்.
எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் உருவான சுக்கிரன் படத்தில் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்க, ரம்பா சாத்திக்கடி போத்திக்கடி என்ற பாடலுக்கு நடனமாடி இருப்பார்.
குடும்பத்துடன் எடுத்த புகைப்படத்தையும் விஜய்யுடன் எடுத்த செல்ஃபி புகைப்படத்தையும் ரம்பா இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.