Cinema Updates : இவருக்கு பதில் இவரா? எஸ் கே காட்டில் ஜோராக பெய்யும் மழை!
ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயம் ரவியின் பிரதர் படம் செப்டம்பர் 27 ஆம் தேதி ரிலீஸாக திட்டமிடப்பட்டுள்ளது என சொல்லப்படுகிறது
ராஜ்குமார் பெரியசாமி - சிவகார்த்திகேயன் - ஜிவி பிரகாஷ் குமார் கூட்டணியில் உருவாகி வரும் அமரன் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.
சூர்யாவை வைத்து சுதா கொங்கரா புறநானூறு என்ற படத்தை இயக்கவுள்ளதாக சொல்லப்பட்ட நிலையில், அவர் அந்த படத்தில் இருந்து விலகியதாகவும் அதற்கு பதில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது
விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன் படத்தில் இருந்து “இவன் யாரோ” என்ற பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகியுள்ளது.
கடந்தாண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருவதாக குறிப்பிட்ட படக்குழு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. மஞ்சு வாரியர் - விஜய் சேதுபதிக்கு இடையேயான காதல் காட்சிகள் இந்த பாகத்தில் இடம்பெறுவுள்ளதை குறிக்கும் வகையில் மற்றொரு போஸ்டர் ஒன்றை வெளியாகியுள்ளது.