Toyota Rumion : புதிய 7 சீட்டர் காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்திய டொயோட்டா!
இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் கார்களில் முதன்மையானது டொயோட்டா கார்கள்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்நிறுவனம் தற்போது புதிய காரான ரூமியோன் என்ற மாடலை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த கார் மாருதி சுசூகி எர்டிகா மாடலின் மறுசீர் அமைக்கப்பட்ட வடிவாகும். அதாவது ரீபேட்ஜ் மாடல் ஆகும்.
இந்த காரானது மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. அத்தோடு 102 பிஎச்பி மற்றும் 137 நியூட்டன் மீட்டரில் இயக்கப்படுகிறது.
ரூமியோனில் புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், ஆட்டோமேட்டிக் ஏசி, இன்ஜின் புஷ் ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் 7-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை அடங்கும். ஆட்டோமேட்டிக் கார், ஏசி, நான்கு ஏர்பேக்குகள் மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இந்த காரின் விலை ரூ.10.29 லட்சம் முதல் ஆரம்பமாகிறது. இதில் எஸ், எஸ் சிஎன்ஜி, ஜி, வி ஆகிய மாடல்களை அறிமுகப்படுத்தி உள்ளது.
மாருதி எர்டிகா, கியா கேரன்ஸ் , ரெனால்ட் ட்ரைபர் மற்றும் மஹிந்திரா மராஸ்ஸோ ஆகிய மாடல்களுக்கு போட்டியாக களமிறக்கப்பட்டுள்ளது டொயோட்டாவின் ரூமியான்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -