World Badminton match : உலக பேட்மிண்டன் போட்டி தொடரில் சாதனை படைத்த இளம் வீரர்கள் யார் யார் தெரியுமா?
28 வது உலக கோப்பை பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டென்மார்க் தலைநகர் ஹோபன்ஹேகன் நகரில் ஆகஸ்ட் 21 ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதிவரை நடந்தது. பிரம்மாண்டமாக தொடங்கிய இந்த போட்டியில் மொத்தம் 54 அணிகள் பங்கேற்றன. நேற்று இறுதி போட்டி நடைபெற்றது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில், தரவரிசையில் மூன்றாவது இடம் வகிக்கும் தாய்லாந்து வீரர் குன்லாவுத் விதித் சரண் 19-21, 21-18, 21-7 என்ற செட் கணக்கில் கோடாய் நராவ்காவை(ஜப்பான்) வீழ்த்தி தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார்
இந்த வெற்றிக்காக அவர் 1 மணி 49 நிமிடங்கள் போராடவேண்டியது. உலக பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் தங்கப்பதக்கத்தை உச்சிமுகந்த முதல் தாய்லாந்து வீரர் இவர் தான்.
பெண்கள் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனை அன்சே யங் (தென்கொரியா) மூன்று முறை உலக சாம்பியனான கரோலினா மரினை (ஸ்பெயின்) இறுதி போட்டியில் எதிர்கொண்டார்.
21-12, 21-10 என்ற செட் கணக்கில் கரோலினா மரியை வீழ்த்தினார். இதன் மூலம் உலக பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற முதல் தென் கொரியா வீராங்கனை என்ற வரலாறு சாதனையை 21 வயதான அன்சே யங் படைத்தார்.
இரட்டையர் பிரிவில் சீன வீராங்கனைகள் சென் கிங் சென் - ஜியா யிபேன் ஜோடி 21-16, 21-12 என்ற நேர் செட்டில் இந்தோனேசியாவின் அப்ரியானி ரஹாயு - சிதி படிவா சில்வா இணையை வீழ்த்தி தொடர்ந்து 3வது முறையாக தங்கம் வென்ற முதல் பெண்கள் இரட்டையர் ஜோடி என்ற பெருமையை பெற்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -