Team Pakistan : ‘கூட்டு முயற்சி மூலமாகவே இந்த இடத்தை பிடித்தோம்..’ பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பேச்சு!
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிக்கு இடையிலான மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடருக்காக இரு அணிகளும் இலங்கை சென்றிருந்தது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇதில் மூன்று போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி அசத்தலான வெற்றியை பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி ஒருநாள் போட்டி தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளி 118 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்தது. 113 புள்ளிகளுடன் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது இந்தியா.
இதனை பற்றி பாபர் அசாம் பேசுகையில், “எப்போதெல்லாம் நீங்கள் நம்பர் ஒன் இடத்தை பிடிக்கிறீர்களோ அது அளவில்லா மகிழ்ச்சியையும், மன நிறைவையும் தரும். இது பயிற்சியாளர் உட்பட ஒட்டுமொத்த அணியினரின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த பரிசு. இதற்கு முன்னர் நாங்கள் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கிறோம் என்று கூறினார்.
“துரதிர்ஷ்டவசமாக அடுத்த ஆட்டத்திலேயே தோற்று அந்த இடத்தை இழந்துள்ளோம். ஆப்கானிஸ்தான் அணியை வென்று தற்போது ஆசிய கோப்பை தொடருக்கு செல்ல உள்ளோம். இருப்பினும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக பேட்டிங் செய்வது எளிதல்ல.” - பாபர் அசாம்.
மேலும் பேசிய அவர் “அவர்கள் சுழற்பந்துவீச்சை எதிர்கொண்டு விளையாடுவது கடினமான ஒன்று. இந்த தொடரில் வெற்றி பெற்ற உத்வேகத்துடன் ஆசிய கோப்பை போட்டிக்கு செல்வது ஒரு கூடுதல் நம்பிக்கையை எங்களுக்கு அளிக்கிறது” என்று கூறினார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -