'Thala' Memes: நடிகர் அஜித் அறிக்கை ; வைரலாகும் ‘இன்னா தல’ மீம்ஸ்
தல என்று அழைக்க வேண்டாமென அஜித்குமார் அறிக்கை விடுத்துள்ளார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசினிமா உலகில் 'தல’என்றால் அது அஜித் என்பது நாம் அறிந்ததே. தீனாவில் ஆரம்பித்த அந்த அடைமொழி இன்று வரை தொடர்கிறது. அஜித் ரசிகர்களுக்கு ‘தல’ என்ற சொல்தான் தாரக மந்திரம்.
“ இனி வரும் காலங்களில் என்னை எழுதும் போதோ, என்னைப் பற்றி குறிப்பிடும் பேசும் போதோ என இயற்பெயரான அஜித் குமார் மற்றும் அஜித் என்றோ அல்லது ஏ கே என்றோ குறிப்பிட்டால் போதுமானது என்றும் தல என்றோ வேறு ஏதாவது பட்ட பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.
முகவரி, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், உன்னைக் கொடு என்னைத் தருவேன் போன்ற படங்களில் நடித்து வந்த அஜித் அறிமுக இயக்குநரான ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளி வந்த தீனா படத்தில் கை கோர்த்தார்.
அதுவரை மிக சாஃப்டான கேரக்டர்களில் நடித்து வந்த அஜித், மாஸ் ஹீரோவாக தீனா படத்தில் களமிறங்கினார். அஜித்திற்கு மிகப் பெரிய திருப்பு முனையாக அமைந்த படத்தில்தான் தல என்ற அடைமொழியும் வந்து சேர்ந்தது.
அங்கு தொடங்கிய அந்தப் அடைமொழி படத்தின் பல இடங்களில் வரும். இந்தப் பெயர் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போக அன்றிலிருந்து அஜித் ரசிகர்களால் தல எனக் கொண்டாடப்பட்டார்.
இந்நிலையில், இனி அஜித்தை ‘தல’ என் அழைக்க முடியாத வருத்தத்தை ரசிகர்கள் ‘மீம்ஸாக’ போட்டு தள்ளி இருக்கின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -