Nayanthara dubbing pics: ’கண்மணி’ நயன்தாராவின் ’காத்துவாக்குல ரெண்டு டப்பிங்’ பிக்ஸ் லேட்டஸ்ட்
விக்னேஷ் சிவன் இயக்கி வரும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகைகள் நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்கின்றனர். விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா இணைந்து நடிப்பதால் இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் முன்னணி கதாப்பாத்திரங்களில் பெயர் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியானது. அதனை அடுத்து, படத்தின் டப்பிங் வேலைகள் தொடங்கியுள்ளது.
விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். அதில், “கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் வசனங்களை நீயே டப்பிங் பண்றது மிகுந்த சந்தோஷம்” என்ற கேப்ஷனோடு பகிர்ந்திருக்கிறார்.
'காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தில் நயன்தாரா ‘கண்மணி’ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இதனால், அவரை அன்பாக கண்மனி என அழைத்து கேப்ஷன் எழுதி இருக்கும் விக்னேஷ் சிவனின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகின்றது.
வழக்கமாக நயன்தாரா நடிக்கும் திரைப்படங்களுக்கு டப்பிங் ஆர்டிஸ்ட் தீபா வெங்கட் டப்பிங் செய்வது வழக்கம். இந்நிலையில் இத்திரைப்படத்திற்கு நயன்தாராவே டப்பிங் பேசி இருக்கிறார் என்பதால், இதுவே கோலிவுட்டில் ‘நானும் ரவுடிதான்’ படத்திற்கு பிறகு நயன்தாரா இப்படத்திற்கு டப்பிங் பேசி இருப்பதாக தெரிகிறது.