Sara Ali Khan : சகோதரர்களுடன் சந்தோஷமாக ரக்ஷா பந்தன் கொண்டாடிய சாரா அலி கான்!
தனுஷ்யா | 19 Aug 2024 06:03 PM (IST)
1
பாலிவுட் நடிகை சாரா அலி கான், பாலிவுட் ஜோடி சைஃப் அலி கான் - அமிர்த்தாவின் மூத்த மகள் ஆவார்.
2
இவர் தனது அறிமுகப் படமான கேதர்நாத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் ஜோடியாக நடித்திருந்தார்.
3
தனுஷ், அக்ஷ்ய குமார் ஆகியோருடன் இணைந்து அத்ரங்கி ரே என்ற படத்தில் நடித்தார். இது தமிழில் கலாட்டா கல்யாணம் என்ற பெயரில் வெளியானது.
4
சமீபத்தில் சாரா ஹத்கே சாரா பச்கே, ராக்கி ஆர் ராணி பிரேம் கி கஹானி, மர்டர் முபாரக், ஏ வத்தன் மேரே வத்தன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
5
இந்நிலையில் இந்திய முழுவதும் ரக்ஷா பந்தன் கொண்டாடப்பட்டு வரும் வேளையில், சாராவும் அவரின் சகோதரர்களுடன் ரக்ஷா பந்தனை கொண்டாடியுள்ளார்.