Sadaa Photos : இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதோ... பளபளக்கும் நடிகை சதா!
தனுஷ்யா | 18 Jul 2024 05:41 PM (IST)
1
சதாஃப் முகமத் சையத் என்பதே நடிகை சதாவின் ரியல் பெயர்.மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ரத்னகிரியில் பிறந்தார்
2
தெலுங்கு திரையுலகில் ஜெயம் படம் மூலம் அறிமுகமானார் சதா. அந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதை பெற்றார்.
3
அதே படம் தமிழில் ரீ-மேக் செய்யப்பட்டது. அதில் ஜெயம் ரவியுடன் நடித்து தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
4
அதன் பின், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் அந்நியன் படத்தில் விக்ரமுடன் நடித்தார். அதனை தொடர்ந்து திருப்பதி, உன்னாலே உன்னாலே போன்ற படங்களில் நடித்தார்.
5
இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார்.