Rakul Preet Transformation : ‘எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்...’ ரசிகர்களை கவர்ந்த ரகுலின் இன்ஸ்டா பதிவு!
தனது குழந்தை பருவத்தில், செம க்யூட்டாக இருக்கிறார் ரகுல்.
சினிமாவில் அறிமுகமாகும் முன் ரகுல் எடுத்தக்கொண்ட புகைப்படம் தான் இது.
தான் நடித்த திரைப்படத்தில் வரும் காட்சியை புகைப்படம் எடுத்துள்ளார்.
ஆன் ஸ்கிரினில் ரகுல் செய்த சேட்டைகள்..
சமீபத்திய புகைப்படங்களையும் இந்த பதிவில் இணைத்துள்ளார் ரகுல்.
“வெள்ளித்திரையில் ஜொலிக்க வேண்டும் என்ற ஆசைக்கொண்ட இளம் பெண்ணாக இருந்தேன். எனக்கு சினிமாவை பற்றி ஒன்றும் தெரியாத போது, மாடலிங் செய்தேன் பின் மிஸ் இந்தியா பட்டத்தை பெற்றேன் பிறகு பட வாய்ப்புகள் கிடைத்தது. என் கதையில் ஏற்றத்தாழ்வுகள், நிராகரிப்புகள் நிறைந்து இருந்தது. இளம் வயது பெண்ணாக மும்பைக்கு சென்று என் சொந்த உழைப்பில் வாழ வேண்டி இருந்தது. ஆடிஷன்களில் பங்கேற்க நீண்ட வரிசைகளில் நின்று, வாய்ப்பளிக்கும் பல இயக்குநர்களுக்கு தொடர்ந்து போன் அடித்தது முதல் படத்தில் ஒப்பந்தம் ஆகும் வரை பல விஷயங்களை கற்றுக்கொண்டுள்ளேன். சுயநம்பிக்கை மட்டும்தான் என்னிடம் இருந்தது. தொடர்ந்து கடினமாக உழைத்துக்கொண்டு வந்தேன். கனவுகளை அடைவது மிகவும் கஷ்டமான ஒன்று. அதனால், சின்ன சின்ன வெற்றிகளையும் கொண்டாடுங்கள். உங்கள் பெரிய இலக்கை நோக்கி பயணம் செய்யுங்கள். உங்கள் கனவுகளை நிஜமாக்குங்கள். வாழ்க்கையில் நெடுந்தொலைவு பயணம் செய்துள்ளேன் என்பதை உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள். என் குடும்பம் இல்லாவிட்டால், இது எல்லாம் நடந்து இருக்காது. அவர்கள்தான் என் நங்கூரம். ரசிகர்களாகிய உங்களின் அன்பும் மிகவும் முக்கியமான ஒரு காரணம். ” என நீண்ட பதிவு ஒன்றை இந்த புகைப்படங்களுடன் இணைத்துள்ளார் ரகுல்.