Thalaivar 171: ‘ஜெயிலர்’ நாயகனுடன் இணைகிறாரா ‘கைதி’ இயக்குநர்?
நடிகர் ரஜினியின் அடுத்த படத்தை, லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appரஜினி, தற்போது ஜெயிலர் படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தை நெல்சன் டைரக்டு செய்கிறார்
கைதி படம் மூலமாக முத்திரை பதித்த இயக்குநர்களுள் ஒருவராக இடம் பெற்றவர், லோகேஷ் கனகராஜ். இதையடுத்து, கமல் ஹாசனை வைத்து ‘விக்ரம்’ படத்தையும் இயக்கி இப்போது விஜய்யை வைத்து ‘லியோ’ படத்தினையும் இயக்கி வருகிறார்.
ரஜினியின் அடுத்த படம், அவரது 171ஆவது படமாகும். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாகவும், அதற்கான வேலைகள் லியோ படப்பிடிப்பிற்கு பின்னர் துவங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. லோகியும் ரஜினியும் இது குறித்து சந்தித்து பேசினர் என்ற தகவலை பலர், ஆங்காங்கே பதிவிட்டு வருகின்றனர்.
சூர்யாவை வைத்து தான் ஒரு படம் எடுக்கவுள்ளதாக லோகேஷ் கனகராஜ் முன்னர் கூறியிருந்தார். இதனால், ரசிகர்கள் “இப்போது ரஜினியை வைத்து படம் எடுத்தால் அடுத்து சூர்யாவை வைத்து எப்போது படம் எடுப்பீர்கள்?” என்றும் லோகேஷ் கனகராஜிடம் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ள கைதி-2 படத்தின் ஷூட்டிங்கும் என்னவாகும் என்பதும் தெரியவில்லை.
ரசிகர்கள் பலர், LCU-வின் முக்கிய படமான விக்ரம்-2 படத்தையும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். இப்போது ரஜினியின் அடுத்த படத்தை லோகி இயக்குவார் என்ற செய்தி உண்மையானால், கைதி மற்றும் விக்ரம் ஆகிய படங்களின் ரிலீஸ் தள்ளிப்போகும் என்பது உறுதி.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -