HBD Kalyani : ‘மஸ்தான போல மாப்பிள்ளை வந்தனே அள தூக்க..’ பிறந்தநாள் காணும் கல்யாணிக்கு வாழ்த்துக்கள்!
கல்யாணி பிரியதர்ஷன் ஏப்ரல் 5 1993ல் பிறந்தார். இவர் மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார்
கல்யாணி பிரியதர்ஷன் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த ‘கிரிஷ் 3’ என்ற ஹிந்தி திரைப்படத்தின் உதவி தயாரிப்பு வடிவமைப்பாளராக தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 2016 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமான இருமுகன் படத்தில் உதவி கலை இயக்குநராக பணியாற்றினார்.
2017 ஆம் ஆண்டு தெலுங்குத் திரைப்படமான ‘ஹலோவில்’ அறிமுகமான இவர், அதற்காக பிலிம்பேர் விருதையும் சிறந்த அறிமுக பெண் நடிகைக்கான விருதையும் வென்றார்.
நடிகர் சிலம்பரசனின் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான ‘மாநாடு’ படத்தில் நடித்தார். இதன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார்.
கடந்த வருடம், இவர் நடிப்பில் வெளியான ஹ்ரதயம், ப்ரோ டாடி, தள்ளுமாலா ஆகிய மலையாள படங்கள் சூப்பர் டுப்பர் ஹிட் ஆனது.
இன்று பிறந்தநாள் காணும் கல்யாணி பிரியதர்ஷனுக்கு பல்வேறு திறை பிரபலங்கள் தங்களின் வாழ்த்துகளை குவித்துவருகின்றனர்