Radhika Sarathkumar : கிழக்கு வாசலில் ரீ என்டரி கொடுக்கும் கிழக்கே போகும் ரயில் நடிகை ராதிகா சரத்குமார்!
எம். ஆர். இராதவின் மகளான ராதிகா, கிழக்கே போகும் ரயில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். குடும்பங்களை கவரும் படத்தில் நடித்த இவர், அனைவருக்கும் பிடித்த விண்டேஜ் நடிகையானார்.
வெள்ளித்திரையில் களம் கண்ட ராதிகா, சின்னத்திரையிலும் இறங்கி அசத்தி மற்ற நடிகைகளுக்கு முன்மாதிரியாக மாறினார். சித்தி, அண்ணாமலை, செல்வி, அரசி, செல்லமே, வாணி ராணி, சந்திரகுமாரி ஆகிய சீரியல்களில் நடித்து பல இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார்.
இப்போது பல படங்களில் துணை கதாபாத்திரமாக நடித்து வருகிறார். சமீபத்தில், சந்திரமுகி இரண்டாம் பாகத்தின் குழுவினருடன் எடுத்த புகைப்படத்தை அவரின் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.
தற்போது, கிழக்கு வாசல் எனும் சீரியலில் தான் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார்.
திருமதி செல்வம் புகழ் சஞ்சீவ் நடிக்கும் இந்நாடகத்தில், விஜய்யின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர் முன் நின்று வழிநடத்தி இயக்கவுள்ளார்.
பொதுவாக ராதிகா நடிக்கும் சீரியல்கள் அனைத்தும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். ஆனால், இம்முறை, கிழக்கு வாசல் சீரியல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.