Jigarthanda 2 teaser Review : மொரட்டு கேங்ஸ்டராக லாரன்ஸ்.. ஜிகர்தண்டா 2 எதை பற்றிய கதை தெரியுமா?
கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து, சில ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த பேச்சுவார்த்தை தொடங்கியது. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என பெயரிடப்பட்ட இப்படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்தாண்டின் தீபாவளிக்கு வெளியாகும் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. அதன் குட்டி விமர்சனத்தை இங்கு காணலாம்.
1975ல் நடக்கும் காங்க்ஸ்டர் கதையாக அமைந்த இப்படத்தின் டீசரில் காடு, ஹார்பர், நகரம் உள்ளிட்ட பல இடங்கள் காண்பிக்கப்படுகின்றன. ராகவா லாரன்ஸ் பார்க்க சற்று கரடுமுரடாக இருப்பதால், இவர்தான் அந்த கேங்ஸ்டர் என்பது தெரிகிறது.
இதில் எஸ்.ஜே.சூர்யாவை பார்க்க சினிமா இயக்குநர் போல தெரிகிறது. கேங்ஸ்டரான லாரன்ஸின் கண்ட்ரோலில் இருக்கும் இடத்தில் படப்பிடிப்பு எடுக்கப்படும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இவர்களுக்கு இடையில், நடக்கும் பிரச்சினைகளையும் அதன் கிளைக்கதைகளையும் விவரிக்கும் படமாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் இருக்கலாம்.
ராகாவா லாரன்ஸின் கதாபாத்திரத்தில் புஷ்பா சாயல் தெரிகிறது. அரசாங்கத்தை எதிர்த்து ஜில்லாவை கலக்கும் பேட் பாய் ஹீரோக்களை கொண்ட படங்களின் வரிசையில் கார்த்திக் சுப்புராஜின் இப்படம் இடம் பெறுகிறது.
இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இதன் பின்னணி இசை கதையோடு பொருந்துகிறது. ஆனால், முதலில் வரும் ஆங்கிலப்பாடல்தான் சற்று செயற்கையாக உள்ளது.