Raashii Khanna Photos : அன்பு அப்பாவுடன் பிறந்தநாளை கொண்டாடிய ராஷி கண்ணா!
டெல்லியில் பிறந்து வளர்ந்த ராஷி கண்ணா, மாடலாக தன் வாழ்க்கையை தொடங்கினார். பின்னர், இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமெட்ராஸ் கஃபே எனும் ஹிந்தி படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானார். அதன் பின் தொடர்ச்சியாக தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.
நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்
அதனை தொடர்ந்து, அடங்க மறு, அயோக்கியா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம், சர்தார் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அரண்மனை 4 படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று பிறந்தநாள் காணும் ராஷி கண்ணா, செடிகளை தன் தோட்டத்தில் நட்டுள்ளார்.
‘வருடா வருடம் வரும் அனைத்து பிறந்தநாளுக்கும் செடிகள் நடுவது, எனது வழக்கம்’ என்பதை கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார்.தனது அப்பாவுடனும் தோழியுடனும் எடுத்த புகைப்படங்களையும் ராஷ் பகிர்ந்துள்ளார். இவை லைக்ஸ்களை அள்ளி வருகிறது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -