Nivetha Pethuraj Photos : க்யூட் லுக்கில் நடிகை நிவேதா பெத்துராஜ்!
மதுரையில் பிறந்து துபாயில் வளர்ந்த நிவேதா பெத்துராஜ், ஐக்கிய அரபு அமீரகம் சார்பாக 2015 ஆம் ஆண்டின் உலக அழகி போட்டியில் கலந்து கொண்டார்.
டாப் 5க்குள் இறுதிப்போட்டி வரை முன்னேறினார். இருப்பினும் அவரால் பட்டத்தை வெல்ல முடியவில்லை.
2016 ஆம் ஆண்டில் ஒரு நாள் கூத்து மூலம் சினிமா உலகில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன் சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்
தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு மொழி படங்களில் மாற்றி மாற்றி நடித்து வருகிறார்.
முன்னதாக காலா எனும் ஹிந்தி க்ரைம் திரில்லர் வெப் தொடரில் நடித்தார். தற்போது பருவு எனும் தெலுங்கு வெப் தொடரில் நடித்துள்ளார்.
இந்த வெப் தொடருக்காக எடுக்கப்பட்ட டெஸ்ட் லுக்கின் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இதில் டாலி எனும் கதாபாத்திரத்தில் நிவேதா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.