Mannangatti Since 1960: நயன்தாராவின் ‘மண்ணாங்கட்டி’ படப்பிடிப்பு நிறைவு கொண்டாட்டம் - க்ளிக்ஸ்!
ட்யூட் விக்கி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் ‘மண்ணாங்கட்டி’ படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. 2023 செப்டம்பர் மாதத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கியது.
நயன்தாரா நடிக்கும் ‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’. ‘ப்ளாக் ஷீப்’ யூடியூப் சேனல் புகழ் ட்யூட் விக்கி இயக்கும் இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
நயன்தாரா தவிர, யோகி பாபு, தேவதர்ஷினி, கௌரி கிஷன், நரேந்திர பிரசாத் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு சான் ரோல்டன் இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் படத்துக்கு ஜி மதன் படத்தொகுப்பு செய்கிறார்.
படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், நயன்தாரா உடன் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
இறுதிகட்டப் பணிகள் முடிந்து விரைவில் இப்படத்தை திரைக்கு வரவிருக்கிறது. படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.