Nayanthara with Kids : குழந்தைகளை கொஞ்சி விளையாடும் நடிகை நயன்தாரா!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயனுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர் என்பதை சொல்லிதான் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை.
நானும் ரெளடிதான் படத்தில் நடிக்கும் போது இவருக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனிற்கும் இடையே காதல் மலர்ந்தது.
இந்த காதல் அப்படியே பாதியில் முடிந்துவிடும் என பலர் கூறிவந்தாலும், அவர்களின் அன்பை நிரூபிக்கும் வகையில் நெருங்கிய வட்டம் சூழ திருமணம் செய்து கொண்டனர்.
இந்த க்யூட்டான ஜோடிக்கு உயிர் ருத்ரோநீல், உலக் தெய்வீக் என்ற இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.
குடும்பத்துடன் அடிக்கடி போட்டோ எடுத்து போஸ்ட் போடும் நயன், தற்போது குழந்தைகளுக்காக நேரம் செலவிட்டு விளையாடும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். “வேலைக்கு செல்லும் முன்னர் சில மணி நேரங்கள் அன்பை பொழிந்த போது...” என்ற கேப்ஷனை இந்த புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளார்.