Kamal Haasan : 64 ஆண்டுகால சினிமா வாழ்க்கை... களத்தூர் கண்ணம்மா கமல்ஹாசனை பற்றிய அரிதான தகவல்கள்!
நடிகர் கமல் ஹாசனின் ரியல் பெயர் பார்த்தசாரதி ஸ்ரீனிவாசன் என்பது பலருக்கும் தெரியாத ஒரு தகவலாகும்
வயது என்னவோ அறுபத்து ஒன்பதாக இருந்தாலும், உலக அளவில் 64 ஆண்டு சினிமா அனுபவத்தை கொண்ட ஒரே கலைஞர் கமல்தான். காரணம், களத்தூர் கண்ணம்மா படத்தில் தொடங்கிய இவரது பயணம் இன்றும் ஓயாமல் இருப்பது ஆகும்.
வெறும் ஆறு வயதிலே, களத்தூர் கண்ணம்மா படத்திற்காக (President's Gold Medal) விருதை பெற்றுள்ளார் கமல். தமிழ் சினிமாவின் அன்றைய உச்ச நட்சத்திரங்களான எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்டோரின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள பெருமை இவரையே சாரும்.
நடன இயக்குநர் தங்கப்பன் மாஸ்டருடன் பணிபுரிந்த கமல், எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிற்கு துணை நடன இயக்குநராக வேலை பார்த்துள்ளார்
பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கமலுக்கு, நடிகராக கம்பேக் கொடுக்க சில ஆண்டுகள் தேவைப்பட்டது. அப்படி அமைந்ததுதான் கே.பாலசந்தரின் அரங்கேற்றம்
தமிழ் சினிமாவில் பிரபலமாவதற்கு முன்பு மலையாள சினிமாவில் செம பேமஸ் ஆகிவிட்டார் கமல். இவர் நடித்த கன்னியாகுமரி என்ற மாலிவுட் படம் முதல் ஹிட்டாக அமைய, தமிழில் பட்டாம்பூச்சி எனும் படம் புகழ் வெளிச்சத்தை கொடுத்தது