Vicky Nayan : அன்பை அள்ளி வீசும் வீடு.. குழந்தைகளோடு கிறிஸ்துமஸை கொண்டாடிய நயன் - விக்கி!

நயன்தாரா, விக்னேஷ் சிவன்
நானும் ரவுடிதான் படப்பிடிப்பில், நயனிற்கும் விக்னேஷ் சிவனிற்கும் இடையே காதல் மலர்ந்தது. அந்த உறவு காதலுடன் முடியாமல் கல்யாணம் வரை சென்றது. இவர்களின் திருமணம் திரை நட்சத்திரங்கள் சூழ கோலகலமாக நடந்தது.
இந்த இரு ஜோடிகளும் வாடைக்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகிய அறிவிப்பை விக்கி, தனது இன்ஸ்டாவில் பதிவிட்டார். இதனால் இவர்கள் சர்ச்சையில் சிக்கினாலும், சட்ட ரீதியாக பிரச்சினையை தீர்த்தனர்.
இரு குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோனில், உலக் தெய்வேக் என வித்தியாசமான பெயரை சூட்டி அனைவரின் கவனத்தை ஈர்த்தனர்.
இவர்கள் தங்கள் குழந்தைகளின் புகைப்படங்களை அவ்வப்போது இணையத்தில் பகிர்வது வழக்கம்.
தற்போது இவர்கள் இருவரும் தங்கள் குழந்தைகளோடு சந்தோஷமாக கிறிஸ்துமஸை கொண்டாடியுள்ளனர்.
இவர்கள் பதிவிட்டுள்ள இந்த அழகிய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.