Actress Ananya: தமிழில் தலை காட்டாத அனன்யா..எங்கே சென்றார் இந்த ’எங்கேயும் எப்போதும்’ நாயகி...?
‘நாடோடிகள்’ படம் மூலம் தமிழில் அறிமுகமான மலையாள நடிகை அனன்யா. இப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களுக்கு பிடித்துப்போக, தொடர்ந்து சீடன், எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்
மலையாளத்தில் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர், சமீப காலமாக தமிழ் திரையுலகின் பக்கம் தலை காட்டாமல் இருக்கிறார்
மலையாளத்தில் பிரபல தயாரிப்பாளராக இருக்கும் கோபி கிருஷ்ணாவின் மகள் இவர். இதனால், இவருக்கு ஆரம்பத்திலிருந்தே பட வாய்ப்புகள் பல குவிந்தன
த்ரில்லர் படங்களில் நடிப்பதற்கு பெயர் போனவர், அனன்யா. இவர், மோகன் லாலுடன் ஷிக்கர் என்ற படத்தில் சேர்ந்து நடித்தார். த்ரில்லர் காட்சிகளில் அனன்யா தைரியமாக நடித்ததால், மோகன்லால் இவரை மலையாளத்தின் விஜயசாந்தி என குறிப்பிட்டு சில இடங்களில் பேசினார்
அனன்யாவின் உண்மையான பெயர், அயில்யா. திரையுலகிற்கு வந்த பின்னர், இவரது பெயர் மாற்றப்பட்டது
அனன்யா, தமிழில் கடைசியாக காட்ஃபாதர் எனும் படத்தில் 2020ஆம் ஆண்டு நடித்திருந்தார். இதையடுத்து, ஆக்ஷன் கதை பாணியில் உருவாகி வரும் ’டீசல்’ எனும் படத்தில் இவர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
தற்போது இவர், தான் மலையாளத்தில் நடித்துள்ள டாடசமா டாட்பவா எனும் படத்தின் ரிலீஸிற்காக காத்துக்கொண்டுள்ளார்
அனன்யாவிற்கு இன்று பிறந்தநாள். இதையொட்டி, இவர் தமிழில் கம்-பேக் கொடுப்பது எப்போது என ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்