✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Maamannan Audio Launch : ஒரே நிகழ்ச்சியில் ஒன்று கூடிய கோலிவுட் பட்டாளம்.. மாமன்னன் இசை வெளியீட்டு விழாவின் ஹைலைட்ஸ் இங்கே!

தனுஷ்யா   |  02 Jun 2023 11:55 AM (IST)
1

மாரி செல்வரஜ் இயக்கத்தில், வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், ஃபஹத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாமன்னன். ஜூன் 1 ஆம் தேதியான நேற்று நேரு விளையாட்டு அரங்கத்தில் மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

2

இந்நிகழ்ச்சியில் படக்குழுவினரை தாண்டி துர்கா ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி, கமல் ஹாசன், பா.ரஞ்சித், வெற்றிமாறன், சூரி, சிவகார்த்திகேயன், ஏ.ஆர். முருகதாஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.முன்னதாக ராசா கண்ணு, ஜிகு ஜிகு ரயில் ஆகிய பாடல்கள் வெளியாகியது. கொடி பறக்குற காலம், நெஞ்சமே, உச்சந்தல, மன்னா மாமன்னா, வீரனே ஆகிய 5 பாடல்களும் உள்ளதாக ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட் மூலம் தெரிவித்தார்.

3

நேற்று நடந்த விழாவில் கலந்துகொண்ட பிரபலங்கள் படத்தை பற்றியும் தமிழ் சினிமா பற்றியும் முக்கியமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். மாமன்னன் படத்தை உதயநிதி எப்படி ஒப்புக்கொண்டார் என்பதையும், ஏ.ஆர்.ஆருடன் நடந்த ஜூம் மீட்டிங் பற்றியும், கீர்த்தி சுரேஷ் படக்குழுவில் இணைந்த கதையையும் மாரி செல்வராஜ் விளக்கினார்.

4

அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பல மாற்றங்களைச் செய்வார் என நம்புவதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். தேர்ந்தெடுத்து படங்களில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் அழகும் அறிவும் கலந்த பேரழகி என்று அவரை பாராட்டினார் கமல்.

5

மேடை ஏறிய கீர்த்தி, படிக்கும் காலத்தில் நடந்த அனுபவங்களை பேசினார். உதயநிதியின் முதல் படத்தை பார்த்த கீர்த்தி‘ஏய்.. அங்க பாருடி.. ஸ்டாலின் அவரோட மகன் எப்படி அழகா இருக்காருன்னு பாரு’என்று சொன்னதாக கூறினார். அப்போது கிருத்திகா உதயநிதி கொடுத்த ரியாக்‌ஷன் ரசிகர்களிடையே சிரிப்பலையை வரவழைத்தது. மாமன்னனில் கம்யூனிஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

6

படத்தின் டைட்டிலான மாமன்னன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள வடிவேலுவை, படம் பார்த்த பின் மாமன்னன் என்றுதான் மக்கள் அழைப்பார்கள் என்று கீர்த்தி பேசினார்.

7

‘தமிழ்நாட்டில் மட்டும்தான் வித்தியாசமான படங்களை வரவேற்கின்றனர். கொஞ்சம் இந்த மாதிரி படம் எடுக்குற படைப்பாளர்களையும் ரசிக்கிறாங்க. சமூக நீதிகளை பேசுகிற படங்களை எடுத்து வணிக ரீதியான வெற்றியை கொடுக்க முடியும் என்பதை நிரூபித்தது தமிழ் சினிமாதான்’ என வெற்றிமாறன் பேசினார்.

8

‘நிச்சயமாக இந்தப் படமும் என்னுடைய வாழ்வியல் சம்பந்தப்பட்ட சமூக நீதி பேசக்கூடிய படமாக தான் இருக்கும். நிச்சயமாக இந்தப் படம் என்றில்லை, நான் எத்தனை படம் எடுத்தாலும், எத்தனை ஜானரில் படம் எடுத்தாலும் என்னுடைய சமூக நீதிக்கான அரசியல் கண்டிப்பாக அதில் இருக்கும்’ என மாரி செல்வராஜ் கூறினார்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Maamannan Audio Launch : ஒரே நிகழ்ச்சியில் ஒன்று கூடிய கோலிவுட் பட்டாளம்.. மாமன்னன் இசை வெளியீட்டு விழாவின் ஹைலைட்ஸ் இங்கே!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.