Siddharth : ‘நான் அரசியல் பேசாமல் இருப்பதற்கு இதுதான் காரணம்..’ டக்கர் ப்ரோமோஷனில் பேசிய சித்தார்த்!
பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் சித்தார்த்.
இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்திருந்தாலும், இவருக்கான இடம் இன்றும் கிடைக்கவில்லை.
நடிப்புடன் நிறுத்திக்கொள்ளாமல் டப்பிங் ஆர்டிஸ்ட், பாடகர் என பன்முகங்களை கொண்டவர் சித்தார்த்.
கார்த்தி ஜி.கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த் டக்கர் என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் தியன்ஷா மற்றும் யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
டக்கர் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசியதாவது, “பல படங்களை கற்றுக்கொடுத்தது இந்த 20 ஆண்டுகால சினிமா வாழ்க்கை . உலகநாயகன் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நானும் நடித்து வருகிறேன். 20 ஆண்டுக்கு முன்னர் நான் இயக்குநர் ஷங்கர் சார் இயக்கத்தில் பாய்ஸ் படத்தில் அறிமுகமானேன். 20 ஆண்டுகள் கழித்து தற்போது அவர் இயக்கத்தில் ஷங்கர் சாருடன் இணைவது மகிழ்ச்சியாக உள்ளது.”
மேலும் பேசிய அவர் “சமூக வலைதளத்தில் அரசியல் கருத்துகளை வெளியிட்டு வந்தேன். சமூகத்தில் அநீதி நடக்கும்போது கோபப்படுகிற பின்னணியில் இருந்து வந்ததால் அப்படி செய்தேன். ஆனால் இப்போது என்னை நம்பி பல தயாரிப்பாளர்கள் இருப்பதால் அமைதியாகிவிட்டேன் . இப்போது நடிப்பில் மட்டும் கவனம் செலுத்துகிறேன். இந்த டக்கர் படத்தில் காமெடி, ஆக்ஷன், காதல் என அனைத்தும் நிறைந்து இருக்கும்.” என்று கூறினார்.