Lal Salaam Trailer : பாட்ஷாவை நினைவுக்கு கொண்டு வரும் மொய்தீன் பாய்.. லால் சலாம் ட்ரெய்லரின் குட்டி விமர்சனம்!
தனுஷ்யா | 06 Feb 2024 11:37 AM (IST)
1
லால் சலாம் படத்தின் ட்ரெய்லர், நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், ஒரு சில காரணங்களால் இரவு 9 மணிக்கு மேல்தான் ட்ரெய்லர் வெளியானது.
2
கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட லால் சலாம் படத்தின் ட்ரெய்லரை பார்க்கும் போது கமர்ஷியல் சினிமாவிற்கான அத்தனை அம்சங்களும் இருக்கிறது.
3
நகைச்சுவை நடிகர் செந்திலை வித்தியாசமான ரோலில் பார்பதற்கு நன்றாக உள்ளன.
4
நடிகர் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்று சொல்லப்பட்டாலும், ட்ரெய்லரின் முக்கால் வாசி காட்சிகளில் அவர்தான் இருக்கிறார்.
5
“பம்பாய்-ல பாய் ஆளே வேற டா” என்ற வசனம் வரும்போது, நினைவுக்கு வருவதெல்லாம் பாட்ஷா படமும் அதன் பின்னணி இசையும்தான்.
6
கிராமத்து பின்னணியில் உருவாகிய இந்த கதையில், மதநல்லிணக்கம் குறித்த கருத்துக்கள் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளது.