Indraja Shankar Wedding : கெட்டி மேளம் கொட்டியாச்சு... ட்ரெண்டாகும் ரோபா ஷங்கர் மகளின் திருமண க்ளிக்ஸ்!

இந்திரஜா ஷங்கர் திருமணம்
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் மின்னும் நடிகர் ரோபோ ஷங்கருக்கு இந்திரஜா என்ற மகள் உள்ளார்.
பிகில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து, விருமன் படத்திலும் நடித்திருந்தார்.
தற்போது இவர் தனது உறவுக்காரரான கார்த்திக் என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், ரீல்ஸ் அனைத்தும் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் இந்திரஜா ஷங்கர்
திருமணத்தின் போது இந்திரஜா அணிந்திருந்த புடவை அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 2 கிராம் தங்கத்தால், இப்புடவை நெய்யப்பட்டுள்ளதாம்.
இதற்கு முன்பாக நலங்கு விழா, நிச்சயதார்த்தம் ஆகியவை கோலாகலமாக நடந்து முடிந்தது. அப்போது எடுத்த புகைப்படங்களையும் இந்திரஜா பகிர்ந்து இருந்தார்.
இந்திரஜா ஷங்கர் - கார்த்திக் ஜோடிக்கு பலரும் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது