Holi 2024 Photos : சிறுசு முதல் பெருசு வரை.. ஹோலி பண்டிகையை கொண்டாடி தீர்த்த மக்கள்!
கலாச்சாரத்திற்கு பெயர் போன இந்தியாவில் பண்டிகைகளுக்கு பஞ்சமே இல்லை. வருடம் தொடங்கியவுடன், உழவுக்கு அங்கீகாரம் கொடுக்கும் பொங்கலில் இருந்து ஒளியின் பண்டிகையான தீபாவளி வரை வரிசையாக பல விசேஷங்கள் வரும்.(Photo Credits : PTI)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅந்தவகையில் வண்ணங்களின் பண்டிகையான ஹோலியும் பலருக்கு பிடிக்கும். சிறுவர் முதல் முதியவர் வரை வயது வரம்பு பார்க்காமல் கொண்டாடப்படும் பண்டிகை இது.(Photo Credits : PTI)
வசந்த காலத்தை வரவேற்கும் வகையில், குளிர் காலத்தின் இறுதியில் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.(Photo Credits : PTI)
பெளர்ணமி அன்றும் பெளர்ணமியின் அடுத்த நாளும், ஹோலி மொத்தம் இரண்டு நாட்களாக கொண்டாடப்படுகிறது.(Photo Credits : PTI)
புரண ரீதியாக பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் மதங்களை தாண்டி மனிதர்களுடன் மனிதர்கள் இந்த பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.(Photo Credits : PTI)
மேற்கு, கிழக்கு, வடக்கு, மத்திய இந்திய பகுதிகளில் மட்டுமல்லாமல் தென்னிந்தியாவிலும் ஹோலி விமரிசையாக காணப்படும். (Photo Credits : PTI)
சென்னையில் உள்ள செளகார்பேட்டை பகுதிக்கு சென்றால் போதும், உங்களை வண்ணப்பொடிகளால் அலங்கரித்துவிடுவார்கள்.(Photo Credits : PTI)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -