Dwayne Johnson: ‘வால் மட்டும் இல்லையே..சேட்டைக்கெல்லாம் சொந்தக்காரி..’மகள்களின் கையால் ‘மார்க்’ வாங்கிய ராக்!

ட்வைன் ஜான்சன்-தி ராக்
ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமாக விளங்கும் நடிகர் ட்வைன் ஜான்சன். இவரை தி ராக் என சிலர் அழைப்பது உண்டு. இவர், மகள்களுடன் நேரம் செலவிடும் வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலானது
ட்வைன் ஜான்சன், மகள்கள் லிப்ஸ்டிக்கை வைத்து தனது முகத்தில் மார்க் போட்டது குறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதனுடன் தனது செல்ஃபிக்கள் சிலவற்றையும் ராக், இணைத்துள்ளார்
ராக்கின் மகள்கள் இருவரும், ஜூம் மீட்டிங்கிற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு மெனிக்யூர் செய்து விடுகிறேன் எனக்கூறி அவரை அழைத்து சென்றார்களாம். பின்பு, லிப்ஸ்டிக்கை வைத்து அவரின் முகம் முழுவதும் பூசி விட்டனராம்
10 நிமிடம் ஆகும் என சொல்லி கூட்டிப்போன மகள்கள், தனது முகத்தில் வரைந்த சில நிமிடங்களுக்குள் தன்னை பார்த்து சிரித்ததாக, நடிகர் ராக் குறிப்பிட்டுள்ளார்
தனது முகத்தில் மகள்கள் கோலம் போட்டதால், ஜூம் மீட்டிங்கிள் கலந்து கொள்ள இருந்த ராக், அதை ரத்து செய்து விட்டாராம்
மகள்கள் தனது முகத்தில் வரைந்த உதட்டு சாயத்தின் நிறம், எவ்வளவு அழித்தாலும் போகவில்லை என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார் ராக்
இந்த புகைப்படங்கள் இணையவாசிகள் இடையே டாப் ட்ரெண்டிங்கிள் உள்ளது