HBD Sonia Agarwal : தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள்..சோனியாவிற்கு இன்று பிறந்தநாள்!
சோனியா அகர்வால் மார்ச் 28, 1982, அன்று பஞ்சாபில் பிறந்தார். இருப்பினும் இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
புதுப்பேட்டை, திருட்டுப்பயலே, ஒரு நாள் ஒரு கனவு, ஒரு கல்லூரியின் கதை, 7ஜி ரெயின்போ காலணி, மதுர, கோவில், காதல் கொண்டேன் போன்ற படங்களில் சிறந்த கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதை கவர்ந்தார்.
காதல் கொண்டேன் படத்தில் தன்னை கதாநாயகியாக அறிமுகப்படுத்திய இயக்குநர் செல்வராகவனையே விரும்பி 2006ல் திருமணம் செய்து கொண்டார் சோனியா
பின்னர், இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்தானது
விவாகரத்துக்கு பின் சின்ன திரை பக்கம் திரும்பிய சோனியா தனியார் தொலைகாட்சியில், நாணல், மல்லி போன்ற நாடகங்களில் நடித்தார்.
கடைசியாக குயின் என்ற வெப்சிரீஸஸில் நடித்துள்ளர். இவர் தற்பொழுது எந்த படம் நடிக்கவில்லை என்றாலும், மக்களின் மனதில் திவ்யாகவும், அனிதாவாகவும் நீங்காத இடம் பிடித்துள்ளார்
இன்று பிறந்தநாள் காணும் சோனியாவிற்கு வாழ்த்து மழை பொழிந்து வருகிறது.