Actor Nani : மஞ்சள் மயமாக ஹோலி கொண்டாடிய தசரா நாயகன்..வைரலாகும் புகைப்படங்கள்!
நான் ஈ படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகர் நானி
தெலுங்கில் பல பிரபலமான படங்களில் நடித்துள்ளார்
தனது இயல்பான சுபாவத்தினால் அனைவரையும் கவருபவர் நானி
ஆரம்பத்தில் ரேடியோ ஜாக்கியாக இருந்த இவர், சினிமாவின் மீது நாட்டம் கொண்டு அந்த வேலையை விட்டு விட்டார்
மிக குறுகிய காலத்திலேயே பல லட்ச ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்த நடிகர் இவர்
கீர்த்தி சுரேஷுடன் இணைந்து தசரா எனும் படத்தில் இணைந்து நடித்துள்ளார்
நானி முதல் முறையாக வித்தியாசான கதாபாத்திரத்தில் நடிப்பதால், இப்படத்தின் மீது பலருக்கும் எதிர்பார்ப்பு உள்ளது
நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி, நடிகர் நானியும் ஹோலியை கொண்டாடியுள்ளார்
மஞ்சள் நிற குர்த்தா அணிந்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்
இந்த புகைப்படங்கள் தற்போது அனைவரின் லைக்ஸ் மழையில் நனைந்து வருகிறது