Vanitha Vijaykumar: ‘ஐயோ அவர விட்ருங்க..’பவர்ஸ்டாருடன் போட்டோ வெளியிட்ட வனிதா..பதரும் ரசிகர்கள்!
சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், கோலிவுட்டின் பிரபலமான நடிகையாக விளங்குபவர், வனிதா விஜயகுமார்
தமிழில் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார், வனிதா
விஜய்யுடன் சந்திரலேகா என்ற படத்தில் இணைந்து நடித்து திரையுலகிற்குள் நுழைந்தார்
நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள் இவர்
2000 ஆம் ஆண்டில் திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகியிருந்த இவர், மீண்டும் நான் ராஜாவாகப்போகிறேன் என்ற படம் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்தார்
அதன் பிறகு வெகு சில படங்களில் மட்டுமே நடித்து வந்த இவர், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பல மக்களுக்கு இவரது முகம் தெரிந்தது
பிக்பாஸ் சீசன் 6 டைட்டிலை வென்ற அசீமிற்கு பல நாட்களாக ஆதரவு கரம் நீட்டி வந்தார், வனிதா
‘கண்ணா லட்டு தின்னஆசையா’ படம் மூலம் பிரபலமான பவர்ஸ்டார் சீனிவாசனுடன் வனிதா புகைப்படம் ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளார்
இதைப்பார்த்த ரசிகர்கள், ‘ஐயோ அவர விட்ருங்க...’என கமெண்ட் செக்ஷனில் கதறி வருகின்றனர்