Cycling :'உடம்புக்கும் நல்லது, ஊருக்கும் நல்லது' - சைக்கிளின் அவசியமும், ஆரோக்கியமும்!
சைக்கிள் என்பது போக்குவரத்துக்கான வாகனம் மட்டுமல்ல. உடல் ஆரோக்கியத்திற்கான ஒரு உடற்பயிற்சியும் கூட.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசைக்கிள் ஓட்டுவது உங்கள் இதயத்திற்கு மிக நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள். சைக்கிள் மிதிப்பதால் உங்கள் இதயம் பலமடைகிறது.
உங்களுக்கு உடல் எடை தான் பிரச்னையா? நீங்கள் சைக்கிள் ஓட்டலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.உடல் எடையை குறைப்பதில் சைக்கிள் ஓட்டுவது சிறந்த பலனைத் தருகிறது.
ரு மணி நேரம் வியர்க்க வியர்க்க சைக்கிள் ஓட்டுவது400 முதல் 1000 கலோரி வரை நீக்குகிறது. கலோரிகளின் அளவு சைக்கிள் ஓட்டுபவர்களின் எடையை பொருத்து மாறுகிறது.
நுரையீரலை உறுதிப்படுத்த மூச்சுப்பயிற்சி எல்லாம் பரவலாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த அளவுக்கு முக்கியமான நுரையீரலை பலப்படுத்த சைக்கிளிங் முக்கிய வேலையை செய்கிறது.
சாதாரணமாக சைக்கிள் மிதித்து செல்வது போல இருந்தாலும் சைக்கிளிங் காலுக்கு சிறந்த உடற்பயிற்சி. குறிப்பாக இடுப்புக்கு கீழே பலமாகிறது.இடுப்பு, முட்டி போன்ற பகுதிகளும் சைக்கிளிங் செய்வதால் உறுதியாகின்றன.
சைக்கிளிங் உடலுக்கு மிக எளிதான ஆனால் அதிகம் பலன் தரக்கூடிய உடற்பயிற்சி. மூட்டுப்பிரச்னைகள் உள்ளவர்களுக்கு சைக்கிளிங் நல்ல நிவாரணியாக இருக்கும்.
இது உடற்பயிற்சியை தொடங்குபவர்களுக்கும் மிக எளிதானது, ஆரோக்கியமானது.
னதுக்கும் மிக நல்லது.மனச்சோர்வு, மன உளைச்சல், கோபம் போன்ற மனம் தொடர்புடைய பிரச்னைகளுக்கு சைக்கிளிங் ஒரு நல்ல தீர்வு.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -