AR Rahman Concert : மழையால் தள்ளிப்போன ஏ.ஆர்.ஆரின் இசை நிகழ்ச்சி..சோகத்தில் ரசிகர்கள்!
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சினிமாவில் 30 ஆண்டு நிறைவு செய்வதை முன்னிட்டு சென்னையில் லைவ் கான்செர்ட் இன்று நடைபெற இருந்தது
மறக்குமா நெஞ்சம்” என்கிற பெயரில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த கான்செர்ட்டில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்துகொள்ள இருந்த நிலையில் கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது
ரஹ்மானின் 30 ஆண்டுகளை பல்வேறு விதங்களில் கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள். முன்னதாக ஆகஸ்ட் முதல் வாரத்தில் ரஹ்மான் இசையமைத்த 15 படங்கள் திரையிடப்பட்டன.
தற்போது இசை நிகழ்ச்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மறக்குமா நெஞ்சம் என்கிற பெயரில் இந்த நேரலை இசை நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.
மனதில் நிலைத்திருக்கும் ஒரு அனுபவமாக இந்த கான்சர்ட் இருக்கும் என்று கூறியிருக்கிறார் ரஹ்மான். சென்னை ஈ.சி.ஆரில் உள்ள ஆதித்யா ராம் பேலேஸில் இந்த நிகழ்ச்சி நடைபெற இருந்தது
ரஹ்மானின் இசையை கேட்க காத்திருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் இன்று சென்னையில் தொடர்மழை பெய்து வந்தது.
இந்நிலையில் சென்னை பனையூரில் நடக்கவிருந்த ரஹ்மானின் இசை நிகழ்ச்சி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது
இந்த புகைப்படங்களை, ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன், “இன்று இசைநிகழ்ச்சி நடக்கவிருந்த இடத்தில் இருந்து..” என்ற கேப்ஷனை வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.
இதனால் இசை ரசிகர்களும் ஏ.ஆர்.ஆரின் ரசிகர்களும் சோகத்தில் உள்ளனர். தேதி குறிப்பிடபடாமல் இந்நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.