Vidaamuyarchi : சுதந்திர தினத்தில் வெளியாகும் விடாமுயற்சி அப்டேட்.. இணையத்தில் உலா வரும் புது தகவல்!
தமிழ்நாட்டில் நடிகர் விஜய்க்கு நிகரான ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கக்கூடிய ஒரு நடிகர் என்றால் அது நடிகர் அஜித் குமார்தான்.
எந்தவொரு இசைவெளியீட்டு விழாவிலோ, பொது நிகழ்ச்சியிலோ இவர் கலந்து கொள்ளாத போதும், அஜித்தின் பெயர் எங்கெங்கும் ஒலித்திருக்கும்.
அஜித் குமார் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் வெளிவந்த துணிவு படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது
இதனை தொடர்ந்து லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் விடாமுயற்சி என்ற படத்தில் நடிப்பதாக போஸ்டர் வெளியானது.
இந்த அப்டேட்டுக்கு பிறகு அஜித் குமார் தனது நண்பர்களுடன் பைக்கில் சுற்றுப்பயணத்தை தொடர்ந்தார்
அதற்கு பின்னர் பல முறை சமூக வலைதளங்களில் அஜித் ரசிகர்கள் விடாமுயற்சியின் அப்டேட் கேட்டு ட்ரெண்ட் செய்து வந்தனர். தற்போது ஆகஸ்ட் 15 ஆம் தேதி விடாமுயற்சி படத்தின் அப்டேட் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.