Amala Paul Vacation Pics: உன்னை ஆராதிப்பதும் தொழுவதும் நெடுயுகமாய் ஆண் செய்துமடிகிற சடங்கு - அமலா பால் போட்டோஸ்
நீயென்பதே உனக்கு நானிட்ட பெயர்தான் அன்பாள் : பின்வரும், கவிதை வரிகள், ட்விட்டர் பக்கத்தில் #வாரிக்கையன் என்ற தீர்க்கத்தரிசி எழுதியது. அவரை, @Rowthra என்ற ட்விட்டர் ஐடியில் பின்தொடரலாம்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஉன்னை ஆராதிப்பதும் தொழுவதும் உன் திருவடிகளிலே வீழ்ந்து கிடப்பதும்; ஏதேச்சையானதல்ல இறைவி நெடுயுகமாய் ஆண் செய்துமடிகிற சடங்கு
தூக்கியெறிந்த ஓர் அன்பின் சன்னிதியில் நின்றுகொண்டு, கையள்ளி கும்பிட்டு என்னை ஏந்திக்கொள், ஏதொன்றும் செய்யென்று இறைஞ்சும் கண்களின் தழலில் காதல் செத்துதான் போகட்டுமே தேவி..!
ஒரு தலைநாள் இரவில் உன் இருகன்னமேந்தி இட்டழித்த முத்தத்தின் ஈரம்; என் கல்லறையெங்கும் சுடுகிறது இனியாள்!!!
துன்பத்தின் கனத்தை தூக்கிக்கொண்டே திரிய தெரியவில்லை இறைவி; செந்நாய் கவ்வி தன் முலைக்குள் மூடிக்கொண்ட கன்றாய் எனைபாவி; சூரியக் கண்களால் முத்தமிடு உன் கழல்களின் வெதுவெதுப்பிலேயே என் பாவத்தை மூடிக்கொள்; மடிசாய்த்து நெற்றியில் இதழ் வை மார்மயிரை பிய்த்தெடு; என் துயறாற்று இறைவி;
எந்த திட்டமும் இல்லாமல் அருந்திய ஆழ்போதை மது; உன் திடீர் முத்தம்.
நீயென்... சுடர்தொற்றிச் சரியும் உடல் சதை; விலைமாது விற்காத முத்தம்; பற்றிக்கொண்ட சாபத்தின் பசை தளிர் பூத்த நஞ்சின் அலர்; அறுபட்ட வனத்தின் அநாதை நிலம் வெயிலெரித்த கடவுள் சடலம்; நிறமழிந்த நினைவின் கண்கள் அன்பின் கரத்தில் அழிந்தொழியா ரேகை;
- - - - - - - - - Advertisement - - - - - - - - -