Amala Paul : அமலா பாலின் குழந்தையா இது? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
பிரபு சாலமனின் மைனா படத்தின் மூலம் பிரபலமான அமலா பால், வீர சேகரன் எனும் படத்தின் மூலம்தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
ஹரிஷ் கல்யாணுடன் சிந்து சமவெளி எனும் படத்திலும் நடித்துள்ளார். தெய்வ திருமகள், தலைவா ஆகிய படங்களில் ஏ.எல்.விஜய்யுடன் இணைந்து பணியாற்றிய அமலா பால், அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஒரு சில காரணங்களால் இருவரும் பிரிந்தனர்.
திருமண முறிவுக்கு பின் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களில் பிசியாக நடித்து வந்தார்.
ஜகத் தேசாய் எனும் தொழிலபதிரை 2023ல் மணந்து கொண்டார். தான் கர்ப்பமாக உள்ளதாக இன்ஸ்டாவில் போட்டோ பதிவிட்டு அறிவித்தார்.
இந்நிலையில் தற்போது பதிவிட்டுள்ள புகைப்படங்களில் அழகான குழந்தை ஒன்றை கையில் ஏந்தியுள்ளார் அமலா பால்.
இந்த பதிவை பார்த்த சில ரசிகர்கள், “அமலா பாலின் குழந்தையா இது? இவ்வளவு வேகமா வளர்ந்துட்டாங்களே?” என ஷாக் ஆகி கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால், இது அமலா பாலுடைய உறவுக்காரரின் குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.