Ajith Latest Photos : வாத்தியராக மாறிய அஜித் குமார்.. ட்ரெண்டாகும் பைக் ட்ரிப் வீடியோ!
துணிவு படத்திற்கு பின்னர், அஜித் விடாமுயற்சி படத்தில் ஒப்பந்தமானார். படத்தின் டைட்டில் போஸ்டர், இயக்குநர் பெயர், இசையமைப்பாளர் பெயரை தவிர்த்து எந்த அப்டேட்டும் வராமல் இருந்தது.
பின்னர் படக்குழு அஜர்பைஜான் நாட்டில் ஷூட்டிங்கிற்காக சென்ற தகவல் வெளியானது. இத்துடன் அஜித்தின் பைக் ட்ரிப் புகைப்படங்கள் மட்டுமே வெளியாகியது.
சில வாரங்களாக மகனுடன் கால்பந்து பயிற்சிக்கு செல்லும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் பரவி வந்தது.
இதற்கு இடையே அஜித் -ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகும் குட் பேட் அக்லி படத்தின் போஸ்டரும் வெளியானது.
சிகிச்சை முடிந்த பின் பேக் டூ ஃபார்ம் கொடுக்கும் வகையில், மீண்டும் பைக் எடுத்து கிளம்பிவிட்டார் அஜித்
இந்நிலையில், பைக் ரேசர்களுக்கு அஜித் பயிற்சி அளிக்கும் வீடியோவை, அஜித்தின் மக்கள் தொடர்பு அலுவலர் சுரேஷ் சந்திரா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்