Aishwarya Rajesh : ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்டான ஸ்டைலிஷ் க்ளிக்ஸ்!
தொகுப்பாளினியாக இருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
2010ம் ஆண்டு வெளியான 'நீதானா அவன்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அட்டகத்தி, ரம்மி, காக்கா முட்டை, வட சென்னை உள்ளிட்ட படங்கள் வெற்றிபடங்களாக அமைந்தன.
சமீபகாலமாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.
எந்த கதாபாத்திரமானாலும் அதில் சிறப்பாக நடித்து ஸ்கோர் செய்ய கூடியவர்.
தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.
தற்போது ஜி.வி. பிரகாஷ் குமார் ஜோடியாக 'டியர்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் ஏப்ரல் 11ம் தேதி வெளியாக உள்ளது.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அவ்வப்போது போட்டோஸ் போஸ்ட் செய்வார்.
தற்போது வெஸ்டர்ன் உடையில் ஸ்டைலாக போஸ் கொடுக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.