25 Years of Padayappa : சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு...25 ஆண்டுகளை கடந்த ரஜினியின் படையப்பா!
கே.எஸ்.ரவிக்குமார் - ரஜினி - ஏ.ஆர் ரஹ்மான் கூட்டணி முதன்முறையாக முத்து படம் மூலம் ஒன்று சேர்ந்தது. மாபெரும் வெற்றிக்கு பின், இதே காம்போ படையப்பா படம் மூலம் இரண்டாவது முறையாக இணைந்தது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபடையப்பா படத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாகவும், சிவாஜி கணேசன் ரஜினிக்கு தந்தையாகவும் , ரம்யா கிருஷ்ணன் நீலாம்பரியாகவும் , நாசர் , மணிவண்ணன் , செந்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.
முக்கியமான சில காட்சிகள் : படத்தில் அவர் இறப்பதற்கு முன்பு அரண்மனை வாசலில் ஒட்கார்ந்து அழுகும் காட்சி மிகவும் சிறப்பாக இருக்கும் . அதே போல் ரஜினி பாம்பை கையில் பிடிக்கும் காட்சி , நீலாம்பரி என்ட்ரி சீன் , இடைவேளைக்கு பிறகு வரும் வயதான தோற்றம் போன்ற பல காட்சிகளை அற்புதமாக படமாக்கியிருப்பார் ரவிக்குமார்
இசை : என் பேரு படையப்பா, மின்சார பூவே, ஓ ஓ ஓ ஓ கிக்கு ஏறுதே, சுத்தி சுத்தி, வாழ்க்கையில் ஆயிரம் என அனைத்து பாடல்களுக்கும் ஹிட் அடித்தது. அதே போல், பின்னணி இசையையும் படத்திற்கான உணர்வை மேலும் கூட்டியது.
வசனம் : நான் வாழ்ந்த வீட்ல கடைசியா ஒரு முறை உட்கார்ந்து வரேன் , படையப்பா ரொம்ப நேரம் எடுத்துக்காத , படையப்பா பேச்சி நின்னு போச்சி , வயசானாலும் அழகும் ஸ்டைலும் இன்னும் மாறவே இல்ல.. போன்ற வசனங்கள் இன்றும் மீம் டெம்ப்ளடாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
படையப்பா படத்தை நினைவூட்டும் வகையில், ட்விட்டரில் ரஜினிகாந்த் ஹாஷ்டாகை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -