Modi Road Show Photos : ரோட் ஷோவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி.. கண்கலங்கிய சென்னை மக்கள்!

மக்களவை தேர்தலின் முதல்கட்ட வாக்குபதிவு வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் நடைபெறவுள்ளன.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
இதனையொட்டி அனைத்து கட்சிகளும் அவரவர் கூட்டணிகளுடன் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக இந்திய பிரதமர் மோடியும், அனைத்து மாநிலங்களுக்கும் சென்று தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்
நேற்று, தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னைக்கு வருகை தந்த மோடி, பனகல் பார்க்கில் தொடங்கி தேனாம்பேட்டை வரை சாலை மார்கமாக வாக்கு சேகரித்தார்.
எப்போதும் பரபரப்பாக இருக்கும் கடைவீதியான பாண்டி பஜாருக்கும் பிரதமர் மோடி சென்று இருந்தார்
பிரதமர் மோடியுடன் தென் சென்னை வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் பி செல்வம், கோவை வேட்பாளார் அண்ணாமலையும் உடனிருந்தனர்.
பிரதமர் மோடியை பார்பதற்கு காத்திருந்த மக்கள், போட்டோ மற்றும் புகைப்படங்களை ஆர்வமாக எடுத்துக்கொண்டனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -