Aditi Rao Photos : பூப்போட்ட சேலை அணிந்து மனதை பறிக்கும் நடிகை அதிதி ராவ் ஹைதாரி!
ஹைதராபாத்தில் பிறந்து டெல்லியில் வளர்ந்த அதிதி ராவ் ஹைதாரி, பிரஜாபதி எனும் மலையாள படம் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து, பரதநாட்டியத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சிருங்காரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்
அபிஷேக் பச்சனின் டெல்லி 6 படம் மூலம் ஹிந்தி சினிமாவில் அறிமுகமாகி, யே சாலி ஜிந்தகி, ராக்ஸ்டார், பத்மாவத் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இவர் முன்னதாகவே தமிழ் சினிமாவில் நடித்திருந்தாலும், மணி ரத்னம் இயக்கத்தில் உருவான காற்று வெளியிடை படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.
செக்க சிவந்த வானம், சைக்கோ, சுஃபியும் சுஜாதையும், ஹே சினாமிகா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷா நடித்த குந்தவை கதாபாத்திரத்திற்கு ஹிந்தியில் டப்பிங் கொடுத்துள்ளார்.
நடிப்பை தாண்டி, அதிதிக்கு ஆடலும் பாடலும் நன்றாகவே வரும். சஞ்சய் லீலா பன்சாலியின் ஹீரமண்டி வெப் தொடரிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.